உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாநகர கடைகளில் போலீசார் குட்கா ரெய்டு

ஈரோடு மாநகர கடைகளில் போலீசார் குட்கா ரெய்டு

ஈரோடு : ஈரோடு மாநகரில் மொத்த, சில்லரை கடைகளில் புகையிலை பொருட்களை தேடி போலீசார் நடத்திய ரெய்டில், ஒரு பாக்கெட் கூட சிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோட்டில் உள்ள கடைகள், குடோன்களில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடந்த வாரம் பெருமளவில் சிக்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை, 6:00 மணிக்கு கொங்காலம்மன் கோவில் வீதியில் உள்ள மொத்த, சில்லரை மளிகை கடைகளில் ஆறு குழுக்களாக பிரிந்து, 33 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பத்து கடைகளில் சோதனை செய்யப்பட்டது. இதில் மூன்று கடைகளின் உரிமையாளர்கள் பிற மாநிலத்துக்கு சென்று விட்டனர். மீதமுள்ள கடைகள், குடோன்களில் புகையிலை பொருட்களை தேடி போலீசார் சோதனை நடத்தினர். காலை, 9:00 மணி வரை சோதனை நடந்தது. இதில் ஒரு பாக்கெட் கூட போலீசார் கைகளில் சிக்கவில்லை. ஏமாற்றத்துடன் போலீசார் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ