உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தன்னாசி முனியப்பன் கோவிலில் பொங்கல் விழா

தன்னாசி முனியப்பன் கோவிலில் பொங்கல் விழா

பவானி, -அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடி அருகே மொண்டிபாளையத்தில், பிரசித்தி பெற்ற தன்னாசி முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை, அம்மாபேட்டை காவிரி ஆற்றிற்கு சென்று, மக்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் வழிபட்டனர். சிலர் மனிதன் மற்றும் கால்நடைகளின் உருவ பொம்மை செய்து வந்து காணிக்கை செலுத்தினர். இரவு முனியப்பன் திருவீதியுலா நடந்தது. மறு பூஜையுடன் திருவிழா இன்று நிறைவடைகிறது. விழாவில் பூதப்பாடி, அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !