உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா

கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா

ஈரோடு: கோபி பி.கே.ஆர்., மகளிர் கலை கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் வெங்கடாச்சலம் தொடங்கி வைத்தார். துணை முதல்வர், துறை முதன்மையர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர், பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்-தது. கும்மி, கோலாட்டம், பறையடித்தல், காவடி, பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கும்மி போன்ற பாரம்பரிய நாட்டுப்புற நடனங்களை நிகழ்த்தினர்.உரியடித்தல், கயிறு இழுத்தல், பச்சைக் குதிரை தாண்டுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ