உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.24.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூஜை

ரூ.24.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூஜை

பெருந்துறை, பெருந்துறை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், பெருந்துறை ஒன்றியம் சின்ன வீர சங்கிலி பஞ்., பச்சாக்கவுண்டம்பாளையத்தில், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, பாப்பம்பாளையம் பஞ்., அம்மா நகரில், 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 10,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, மடத்துப்பாளையம் பஞ்., மடத்துப்பாளையத்தில், 6.05 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வடிகால் அமைக்கும் பணி, தோரணவாவி பஞ்., வடக்குபாளையத்தில், 2.15 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி என, 24.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளை, பெருந்துறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயக்குமார், பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை