உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.2.35 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

ரூ.2.35 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

காங்கேயம்: காங்கேயம் ஒன்றியம், நகராட்சி பகுதிகளில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 2.35 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று காலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், காங்கேயம் நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன், ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் யூனியன் சேர்மேன் மகேஷ்குமார், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ