மேலும் செய்திகள்
சமூக நலத்துறை பணியாளர் சங்க கரூர் மாவட்ட மாநாடு
31-Aug-2025
ஈரோடு :தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட மாநாடு ஈரோட்டில் நடந்தது. கண்காணிப்பாளர் ர.கண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கோமதி, சண்முகவடிவு, சக்தி வினோத்குமார், வெற்றி வேல் உட்பட பலர் பேசினர்.நேரடி உதவியாளர் பணி நியமனத்தை தவிர்த்து, தகுதியான இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் நடத்த வேண்டும். வட்டார அளவில் இளநிலை நிர்வாக அலுவலர் பணியிடம், மாவட்ட, மண்டல அளவில் நிர்வாக அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும். அனைத்து வட்டங்களிலும் அலுவலர் முதல் அலுவலக உதவியாளர் வரை உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
31-Aug-2025