உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல்களை திருடிய௩ பேருக்கு காப்பு

சேவல்களை திருடிய௩ பேருக்கு காப்பு

கோபி: கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூரை சேர்ந்தவர் அமுதா, 36, கட்டடத்தொழிலாளி; இவர் ஆடு மற்றும் சேவல் வளர்த்து வருகிறார். வீட்டருகே நேற்று திரிந்த இரு சேவல்களை, மூவர் திருடிக்கொண்டு ஓடினர். இதைக்கண்ட அமுதா சத்தமிடவே, அப்பகுதி மக்கள் மூவரையும் பிடித்து, கவுந்தப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேலு, 41, நவீன்குமார், 23, குமார், 34, என தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை