மேலும் செய்திகள்
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
29-Mar-2025
ஈரோடு: தமிழ்நாடு அனைத்து அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதி-யர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் சோமசுந்-தரம், மாவட்ட பொருளாளர் மணிமாலா பேசினர். குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ காப்-பீடு, ஓய்வூதியத்துடன் டீ.ஏ., சேர்த்து வழங்க வலியுறுத்தினர். நிர்-வாகிகள் வேலுசாமி, குமார், தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்-றனர்.
29-Mar-2025