உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடி, சத்தியில் மழை தாராபுரத்திலும் கொட்டியது

கொடுமுடி, சத்தியில் மழை தாராபுரத்திலும் கொட்டியது

ஈரோடு, ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நேற்று மாலை, 6:45 மணியளவில் திடீரென மழை பெய்ய துவங்கியது. அதேவேகத்தில், 45 நிமிடங்கள் கொட்டி தீர்த்தது. மழை துவங்கிய சில நிமிடங்களில் மின்தடை ஏற்பட்டது. மழை முடிந்து இரவு, 9:00 மணி வரையிலும், மின் சப்ளை கிடைக்கவில்லை. இதனால் மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். கொடுமுடி ராசாம்பாளையத்தில் இடி-மின்னல் தாக்கி இரு தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. * சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சிவியார்பாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, கே.என்.பாளையம், தாசரி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு, 8:00 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இடி-மின்னலுடன் மிதமாக வெகு நேரம் பெய்தது.* ஈரோடு மாநகரில் நேற்றிரவு, 9:௦௦ மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. வீரப்பன்சத்திரம், சம்பத்நகர், சூளை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான வேகத்தில் தொடங்கிய மழை, ௧௦ நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. அதேசமயம் ப.செ.பார்க், வெட்டுக்காட்டு வலசு, பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான துாறலுடன் நின்றது.தாராபுரத்தில்...திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் நேற்றிரவு, 7:00 மணியளவில், துாறலுடன் துவங்கிய மழை, சில நிமிடங்களில் கன மழையாகி வெளுத்து வாங்கியது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால், வசந்தா ரோடு, பூக்கடை கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை