உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மா.கம்யூ., சார்பில் பேரணி

மா.கம்யூ., சார்பில் பேரணி

ஈரோடு:திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பு, அரசியல் சாசனத்துக்கு முரணானது. உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து இத்தீர்ப்பை திருத்த வேண்டும். இத்தீர்ப்பால் மக்கள் ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டுள்ளது. மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை அனுமதிக்கக்கூடாது. மத சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து, மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணி நேற்று நடந்தது. மீனாட்சிசுந்தரனார் சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது. மாவட்ட செயலர் ரகுராமன், இ.கம்யூ., மாவட்ட செயலர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., சார்பில், 'மத நல்லிணக்கம் காப்போம்; மக்களை பாதுகாப்போம்' என்பதை வலியுறுத்தி சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ