கோபியில் ராம்ராஜ் காட்டன் ேஷாரூம் திறப்பு விழா
கோபி, கோபியில், ஈரோடு-சத்தி சாலையில் கரட்டூர் ஆர்ச் அருகே, கயல்விழி காம்ப்ளக்சில், ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி ஷோரூமை திறந்து வைத்தார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் வரவேற்றார். கோபி அபி எஸ்.கே., மருத்துவமனை இயக்குனர் டாக்டர் குமரேசன், முதல் விற்பனையை துவக்கி வைத்தார். கோபி கயல் ஸ்போர்ட்ஸ் சென்டர் உரிமையாளர் கோட்டீஸ்வரன் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.ராம்ராஜ் காட்டன் உற்பத்தி செய்யும் அனைத்து ரகங்களும், மிருதுவான பருத்தி நுாலிழைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட துணி ரகங்களில் இருந்து, முன்னணி வல்லுனர்களை கொண்டு வடிவமைத்து விற்பனை செய்யப்படுகிறது. ராம்ராஜ் காட்டன் ேஷாரூம்களில் அட்ஜஸ்டபிள் வேட்டி, பேன்சி பார்டர் வேட்டி, கறை படியாத வேட்டி, பட்டு வேட்டி உள்ளது. காட்டன் சர்ட்டுகள், எம்ப்ராய்டரி சர்ட்டுகள், சுபமுகூர்த்த சர்ட்டுகள், பார்டர் மேட்சிங் லினன் சர்ட்டுகள் மற்றும் டி-சர்ட்டுகள் உள்ளன. ஆண்களுக்கு டிசைனுடன் கூடிய பனியன்கள், ஜட்டிகள், வேட்டி கட்டிக்கொள்ள வசதியாக பிரத்யேக பெல்ட்டுகள் உள்ளன.பெண்களுக்கான லெக்கின்ஸ், சிம்மிஸ் மற்றும் அனைத்து விதமான உள்ளாடைகளும் விற்பனைக்கு உள்ளது. இப்போது ராம்ராஜ் காட்டன் நிறுவனம், பெண்களுக்கென காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கான தனிப்பிரிவுகளை துவங்கியுள்ளது.