சாலையோர சுவற்றில் கார் மோதி ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பலி
பவானி, அம்மாபேட்டை அடுத்த மூன்றாம்சாவடி டாஸ்மாக் கடை அருகே, ஈட்டியாஸ் லைவ் கார் நேற்று மாலை, 4:00 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவற்றில் மோதியதில், காரை ஓட்டி வந்தவர் காயமடைந்தார். அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.அம்மாபேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், காஞ்சிகோவிலை சேர்ந்த சரவணன், 50: ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளது தெரியவந்தது. இவர் நேற்று மாலை, காஞ்சிகோவிலில் இருந்து, அம்மாபேட்டை அருகே இடம் விற்பனை சம்பந்தமாக செல்லும் போது, மூன்றாம்சாவடியில், மது அருந்திவிட்டு, போதையில் சென்ற போது, சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது தெரியவந்துள்ளது.