அதிவேக பைக்கால் விபத்து வாடகை கார் ஓட்டுனர் பலி
பவானிசாகர், கோவை, பீளமேட்டை சேர்ந்தவர் முருகன், 22; வாடகை கார் டிரைவர். பவானிசாகர் அருகே காராச்சிக்கொரையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று வந்தார். அங்கிருந்து பண்ணாரி சாலையில் யமஹா ஆர்-15 பைக்கில் சென்றார். பவானிசாகர்-பண்ணாரி சாலையில் காமராஜ் நகர் பாலம் அருகே அதிவேகத்தில் சென்றபோது, நிலை தடுமாறி பாலத்தில் பைக் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில், கொத்தமங்கலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.