உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கழிவு பொருட்களை அகற்ற கோரிக்கை

கழிவு பொருட்களை அகற்ற கோரிக்கை

கழிவு பொருட்களை அகற்ற கோரிக்கைகரூர், நவ. 3-சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள, கழிவு பொருட்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் மாவட்டம் கோதுார், குப்புச்சிபாளையம், மாங்காசோழிபாளையம், கள்ளிப்பாளையம், ஆத்துார் பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம், டெக்ஸ்சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ளடைல், பஸ் பாடி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. கரூர் மற்றும் வெங்கமேடு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகளை, கோதுார் சாலையின் இருபுறமும் கொட்டி செல்கின்றனர். பஸ் பாடி கட்டும் நிறுவனங்களில் இருந்து கழிக்கப்பட்ட மரப்பலகை, கண்ணாடி துண்டு, பிளாஸ்டிக் பொருட்களையும் கொட்டி செல்கின்றனர்.மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்களும், சாலை ஓரத்தில் குடித்து விட்டு, மதுபாட்டில்களை அங்கேயே வீசி விடுகின்றனர். இதுமட்டுமின்றி, சாலையில் சேரும் குப்பைகளை அகற்றாமல், அப்படியே தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதால், வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர்.எனவே, சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவு பொருட்களை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !