உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சொத்து மதிப்பு 2 முறை உயர்வு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

சொத்து மதிப்பு 2 முறை உயர்வு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

ஈரோடு: பத்திர பதிவுத்துறை கடந்த ஓராண்டில், இருமுறை சொத்து மதிப்பை உயர்த்தி, பல வரிகளை உயர்த்தியுள்ளது. இதை திரும்ப பெற வலியுறுத்தி, த.மா.கா., ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார்.அவரது கடிதத்தில் கூறியதாவது: அரசு பதிவுத்துறை கடந்த ஓராண்டில் சொத்துக்களின் மதிப்பை, 2 முறை உயர்த்தி உள்ளது. கடந்த, 2023 ஏப்., 10ல் செத்து மதிப்பு, 33 சதவீதம் உயர்ந்தது. இந்தாண்டு கடந்த ஜூலை, 1ல் மீண்டும், 20 முதல், 30 சதவீதம் உயர்த்தியது. இது, ஏற்கனவே இருந்த மதிப்பைவிட, 60 சதவீதம் சொத்தின் மதிப்பை உயர்த்தி உள்ளது. இதனால், சொத்தை விற்பனை செய்வது, குடும்ப பரிவர்த்தனை செய்வது போன்ற பத்திரப்பதிவு செய்ய அதிக செலவாகும். ஏழை, எளிய மக்கள் பாதிப்பார்கள். அரசின் உத்தரவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.போராட்டம் அறிவிப்புஈரோடு, வரி செலுத்துவோர் சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பாரதி விடுத்த அறிக்கை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசும், 2 ஆண்டுக்குள் மீண்டும் சொத்து வரி உயர்வு செய்துள்ளது. பழைய கட்டடங்களில் சொத்தின் வயது தன்மையை பாராமல் புதிய வரி விதிப்பால், 500 முதல், 1,000 சதவீதம் என வரி விதிப்பது, கடும் விரக்தியை ஏற்படுத்துகிறது.ஆண்டு தோறும், 6 சதவீத உயர்வு செய்தமைக்கும், லோக்சபா தேர்தலுக்கு பின் மக்களுக்கு பரிசாக மீண்டும், மீண்டும் சொத்து வரி உயர்வு செய்தமைக்கும், ஈரோடு வரி செலுத்துவோர் சங்கம் சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி சொத்து வரி உயர்வை பரிசீலித்து, உயர்வை வாபஸ் பெற வேண்டும். ஏற்கனவே இரு ஆண்டுகளில், 100 சதவீத வரி உயர்வு செய்த நிலையில் மீண்டும் வரி உயர்வு செய்தது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. திரும்ப பெறாவிட்டால் சங்கம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை