மேலும் செய்திகள்
வீட்டுமனை பட்டா கோரி 500க்கும் மேற்பட்டோர் மனு
19-Aug-2025
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலர்கள் சின்னராஜ், சிந்தனை செல்வன் ஆகியோர் தலைமையில், கிராம மக்கள் மனு வழங்கி கூறியதாவது:சத்தியமங்கலம் தாலுகா உத்தாண்டியூர் அருகே பூசாரிபாளையம், மாரனுார் ஏ.டி.காலனியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். கடந்த, 25 ஆண்டுக்கு மேலாக வசிப்பதுடன், கூலி வேலை, விவசாய பணிகள் செய்து பிழைப்பு நடத்துகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை, வீடு இல்லை. குடிசை அமைத்தும், கிடைக்கும் வீட்டில், 2, 3 குடும்பம் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு குடும்பத்திலும், 4 முதல், 6 பேர் உள்ளதால் சிரமப்படுகிறோம். பொருளாதார ரீதியாகவும் பின் தங்கி உள்ளதால், எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
19-Aug-2025