உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழில் உரிம வரி ரத்து மாநகராட்சிக்கு கோரிக்கை

தொழில் உரிம வரி ரத்து மாநகராட்சிக்கு கோரிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்ட கட்டட பொருள் விற்பனையாளர் சங்கத்தின், 33வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். கவுரவ தலைவர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். உதவி தலைவர் முகமது ரபீக் வரவேற்றார். நிதிநிலை அறிக்கையை பொருளாளர் சின்னசாமி சமர்ப்பித்தார். ஆண்டறிக்கையை இணை செயலாளர் குமார் தாக்கல் செய்தார். சங்கத்தின் நடவடிக்கை, தீர்மானங்களை செயலாளர் தனபாலன் விளக்கினார்.மாநகராட்சியில் தற்போது புதிதாக தொழில் உரிமம் என்ற வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். வணிக நிறுவனங்களுக்கு, 100 சதவீத சொத்து வரியை உயர்த்திய நிலையில், ஆண்டு தோறும் 6 சதவீதம் உயர்வு என்பது ஏற்புடையதில்லை. இதை 3 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை