உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆன்லைன் சூதாட்ட தடை வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற கோரிக்கை

ஆன்லைன் சூதாட்ட தடை வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற கோரிக்கை

'ஆன்லைன்' சூதாட்ட சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 'ஆன்லைன்' சூதாட்டத்தில் ஈடுபட்டு பலர் பணத்தை இழந்து வருவதும், அதன் தொடர்ச்சியாக தற்கொலை நிகழ்வுகளும் அதிகரித்ததை அடுத்து, இதை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அபராதம்'ஆன்லைன் கேமிங்' ஒழுங்குமுறை சட்டம் 2025' என்ற பெயரில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த சட்டம், ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்கிறது. விளம்பரப்படுத்துவோருக்கு இரண்டு ஆண்டு சிறை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதற்கு பல்வேறு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. டில்லி, கர்நாடகா, மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில் புதிய சட்டத்திற்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது.குழப்பம் ஒரே விவகாரம் தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்கள் வெவ்வேறு உத்தரவுகளை பிறப்பித்தால் அது குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும், தேவையில்லாத சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காக உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !