உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எலக்ட்ரீசியன் உடல் வாய்க்காலில் மீட்பு

எலக்ட்ரீசியன் உடல் வாய்க்காலில் மீட்பு

கோபி: கோபி அருகே செல்லிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 35, எலக்ட்ரீசியனான இவர், நேற்று முன்தினம் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எலத்துார் செட்டிபாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில், கார்த்திகேயன் சடலமாக மிதந்தார். கடத்துார் போலீசார் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கார்த்திகேயனுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில், அவரது மனைவி யோகேஸ்வரி புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ