ஆற்றில் கிடந்த சிலைகள் மீட்பு
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே பவானி ஆற்றில், சிலைகள் கிடப்பதாக, ஈரோடு தொல்லியல் துறையினருக்கு ஆறு மாதங்களுக்கு முன், தகவல் போனது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு சுவாமி சிலைகள் இருந்தன. ஆனால், பல்வேறு காரணங்களால் சிலையை எடுத்து செல்லவில்லை. இந்நிலையில் வாணிபுத்துார் ஆர்.ஐ., ஜெயக்குமார் தலைமையிலான வருவாய் துறையினர், பவானி ஆற்றுக்கு நேற்று சென்றனர்.அங்கு கிடந்த அம்மன், கருப்பராயன், நவக்கிரகங்கள், போர்வீரர் உள்ளிட்ட, 14 கற்சிலைகளை கைப்பற்றி கோபி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். ஆய்வுக்கு ஈரோடு தொல்லியல் துறையினருக்கு இன்று சிலைகளை அனுப்பி வைக்கப்போவதாக தெரிவித்தனர்.