உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் 2வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாநகரில் 2வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோடு : ஈரோட்டில் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, ஆர்.கே.வி.ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதில் ப.செ.பார்க்கில் துவங்கி மணிக்கூண்டு, எல்லை மாரியம்மன் கோயில் வரை, 250க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இரண்டாவது நாளாக நேற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதில் மணிக்கூண்டு சாலை, ஆர்.கே.வி.ரோடு, கிருஷ்ணா தியேட்டர் ரோடு, நேதாஜி ரோடு, கச்சேரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இதை தொடர்ந்து கடை மற்றும் கடைகளின் முகப்பில் சாலை வரை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடை போர்டுகள், கான்கிரீட் தளங்களை இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால், சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பாரபட்சம் ஏன்?ஆர்.கே.வி.,ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, அப்பகுதி கடைக்காரர்கள் சிலர், ஒன்று திரண்டு ஆக்கிரமிப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டி, அதிகாரிகளை முற்றுகையிட்டனர். பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வலியுறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீசார், கடைக்காரர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை