உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கரூர் சம்பவத்தில் பலி 3 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்

கரூர் சம்பவத்தில் பலி 3 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்

ஈரோடு, கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது.இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பலியான மூன்று பேரின் குடும்பத்தினருக்கு, நிவாரணத் தொகைக்கான காசோலை, நேற்று வழங்கப்பட்டது.கொடுமுடி தாலுகா ஆவுடையார்பாறை சதீஷ்குமார்; வெங்கம்பூர் வெற்றி கோனார்பாளையம் ரேவதி ஆகியோர் குடும்பத்தினருக்கு, ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.பவானி அருகே ஜம்பை பழனி ஆண்டவர் கோவில் வீதி மோகன் குடும்பத்தினருக்கு, பவானி தாசில்தார் வெங்கடேஸ்வரன், காசோலை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !