உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா பொருட்கள் விற்பனையில் இதுவரை ரூ.1.23 கோடி அபராதம்

குட்கா பொருட்கள் விற்பனையில் இதுவரை ரூ.1.23 கோடி அபராதம்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜன., முதல் இதுவரை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 461 கடைகள் மூடப்பட்டது. அக்கடைகளுக்கு, 1 கோடியே, 23 லட்சத்து, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து, 778 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான அழிப்பு குழு மூலம் குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டுள்ளது.தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், முதன்முறை குற்றத்துக்கு, 25,000 ரூபாய் அபராதம், 15 நாட்கள் வணிக நிறுவனம் மூடப்படும். அதே உணவு வணிகர், 2ம் முறை விற்பனை செய்தால், 50,000 ரூபாய் அபராதமும், 30 நாட்கள் நிறுவனம் மூடப்படும். மூன்றாவது முறை விற்பனை செய்தால், 1 லட்சம் ரூபாய் அபராதம், 90 நாட்கள் நிறுவனம் மூடப்படும். நிறுவன உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். மவாட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக இதுவரை, 53 வழக்குகள் பதிந்து, 2.89 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள், நிகோட்டின் கலந்த உணவு பொருட்கள், கலப்பட பொருட்கள் விற்பது தெரியவந்தால், 0424 2223545 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.* அந்தியூர் அருகே நகலுார் பிரிவில் விஜயலட்சுமி மளிகை கடையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட இரண்டு கிலோ ஹான்ஸ், 100 கிராம் கூல்-லிப் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ