உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.132 கோடியில் சாலை அமைக்கும் பணி: மாநகராட்சி வார்டுகளில் முடக்கம்

ரூ.132 கோடியில் சாலை அமைக்கும் பணி: மாநகராட்சி வார்டுகளில் முடக்கம்

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில், 60 வார்டுகளில் சேதமான சாலைகளை சீரமைக்க, புதியதாக தார்ச்சாலை அமைக்க, 132.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இதை தொடர்ந்து, 2023 ஜூலை மாதம், மாநகராட்சி பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணி, 284 கி.மீ., துாரத்துக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பணிகளை, 2024 ஜன., முடிக்க திட்டமிட்டனர். ஆனால், பல இடங்களில் ஜல்லி கொட்டி சாலை சமன்படுத்தப்பட்ட நிலையில், தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்காமல் முடங்கியுள்ளது.தற்போது ஜல்லி பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி அதிகாரிகள் ஒத்திப்போட்டு வந்தனர். நடத்தை விதிகளை விலக்கி பல வாரமாகிய நிலையிலும், பணியை தொடங்காமல் உள்ளனர்.எனவே சாலை அமைக்கும் பணியை, மேலும் கிடப்பில் போடாமல், விரைந்து மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி