உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டுறவு சங்க நிகர லாபத்தில் ரூ.25.91 லட்சம்ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, கல்வி நிதிக்கு வழங்கல்

கூட்டுறவு சங்க நிகர லாபத்தில் ரூ.25.91 லட்சம்ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, கல்வி நிதிக்கு வழங்கல்

கூட்டுறவு சங்க நிகர லாபத்தில் ரூ.25.91 லட்சம்ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, கல்வி நிதிக்கு வழங்கல்நாமக்கல்:கூட்டுறவு சங்கங்களின் நிகர லாபத்தில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, கல்வி நிதி என, மொத்தம், 25.91 லட்சம் ரூபாய்க்கான காசோலை, இணைப்பதிவாளரிடம் வழங்கப்பட்டது. மோகனுார் மின் பகிர்மான அலுவலர் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம், 2022-23ம் ஆண்டு பெற்ற நிகர லாபத்தில், தமிழக கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, 4 லட்சத்து, 5,484 ரூபாய், கூட்டுறவு கல்வி நிதி, இரண்டு லட்சத்து, 70,322 ரூபாய் என, மொத்தம், ஆறு லட்சத்து, 75,806 ரூபாய்க்கான காசோலையை, கூட்டுறவு சார் பதிவாளர் சிவசக்தி, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசிடம் வழங்கினார்.அதேபோல், கார்கூடல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிகர லாபத்தில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, 5 லட்சத்து, 45,298 ரூபாய், கல்வி நிதி, 3 லட்சத்து, 63,532 ரூபாய் என, மொத்தம், 9 லட்சத்து, 8,830 ரூபாய்க்கான காசோலையை, கூட்டுறவு சார்பதிவாளர் சதீஸ்குமார், இணைப்பதிவாளரிடம் வழங்கினார்.மேலும், முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின், 2021-22ம் ஆண்டு நிகர லாபத்தில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, 79,774 ரூபாய், கல்வி நிதி, 53,183 ரூபாய், 2022-23ம் ஆண்டு நிகர லாபத்தில், ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி, 5 லட்சத்து, 24,061 ரூபாய், கல்வி நிதி, 3 லட்சத்து, 49,374 ரூபாய் என, மொத்தம், 10 லட்சத்து, 6,392 ரூபாய்க்கான காசோலையை, இணைப்பதிவாளர் அருளரசிடம் வழங்கப்பட்டது.மொத்தமாக, மூன்று சங்கங்களில் இருந்தும், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, கூட்டுறவு கல்வி நிதியாக, 25 லட்சத்து, 91,028 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.நாமக்கல் நகர துணைப்பதிவாளர்(பொ) பால் ஜோசப், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார் பதிவாளர் சரவணன், செயலாளர்கள் சேகர், வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை