உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராவல் மண் கடத்தலுக்குரூ.33.87 லட்சம் அபராதம்

கிராவல் மண் கடத்தலுக்குரூ.33.87 லட்சம் அபராதம்

பவானி:அம்மாபேட்டை அருகே குறிச்சி மலைப்பகுதியில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அம்மாபேட்டை போலீசார், அந்தியூர், பச்சாம்பாளையத்தை சேர்ந்த மோகன், 47, என்பவரை கைது செய்தனர். ஈரோடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வில், 4,365 கன மீட்டர் கிராவல் மண் வெட்டி கடத்தப்பட்டு உறுதியானது. இதை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி, மோகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜர் ஆகாததால், கனிமங்கள் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1957-ன் பிரிவு 4(1) மற்றும் 4(1)(ஏ)ன்படி, 33.87 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் உத்தரவிட்டார்.தொகையை முழுவதும் வசூலித்து அறிக்கை அனுப்ப, பவானி தாசில்தாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ