பூஜை பொருட்கள் விற்பனை தீவிரம்
ஈரோடு: கார்த்திகை மாதம் நாளை மறுதினம் பிறக்கிறது. இந்த நாளில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், சபரிமலை செல்வதற்கு விரதம் தொடங்குவர். இதனால் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள கடைகளில், ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான துளசி மணிமாலை, சந்தனம், ருத்ராட்சம், ஸ்படிகம், வெள்ளை துளசி, ரத்த சந்தனம், கருப்பு கல்லுமணி, பூதராசம் போன்ற மாலைகள் மற்றும் வேட்டி, துண்டு விற்பனைக்கு குவிக்கப்பட்-டுள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: துளசி மணிமா-லைகள், 35 ரூபாயில் இருந்து 150 ரூபாய்; துண்டுகள், 40 ரூபாய் முதல் 100 ரூபாய்; வேட்டிகள், 80 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதி பக்தர்களும், வாங்கி செல்வர். இவை தவிர ஐயப்பன், முருகன், விநாயகர் சுவாமி டாலரும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினர்.