சம்பங்கி பூ விலை சரிவு
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டுக்கு தினமும், 500 கிலோ வரை சம்பங்கி பூ விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கோவில் திருவிழா, முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே போதிய விலை கிடைக்கிறது. பிற சமயங்களில் விலை கிடைப்பத்தில்லை. தற்போது சீசனால் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், முகூர்த்த சீசன், பண்டிகை இல்லாததால் நேற்று மிகவும் சரிந்து, ஒரு கிலோ, 15 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் சம்பங்கி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேசமயம் சம்பங்கி மாலை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வியாபாரிகள் விற்கின்றனர்.