உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார்த்திகை மாத 3வது சோமவாரம் மகுடேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா

கார்த்திகை மாத 3வது சோமவாரம் மகுடேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா

கொடுமுடி: கார்த்திகை மாத திங்கள்கிழமை, சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் உலக நன்மை வேண்டி சிவாலயங்களில் சங்கு பூஜை நடப்பது வழக்கம். இதன்படி கார்த்திகை மாத மூன்றாவது சோமவாரமான நேற்று, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக சிவலிங்க வடிவில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்-பட்டிருந்த 1,008 சங்குகளுக்கு ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து மகுடேஸ்வரருக்கு, 16 வித திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. பிறகு, 11 கலசங்கள் வைத்து ருத்ராபிஷேகம், ருத்ரபாராயண வழிபாடு நடந்தது.பின்னர் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு, 1,008 சங்குக-ளுக்கு பஞ்சாட்சர ஜப வழிபாடு, ஹோமம் நடந்தது. மாலையில், 1,008 சங்குகளுக்கும் விசேஷ மூலிகை பொருள் கலந்த புனித நீரால் அபிஷேகம், ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் கட்டளைத்தம்பிரான் மற்றும் திரளான சிவன-டியார்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.இதேபோல் ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத மூன்றாவது சோமவாரத்தை ஒட்டி, ருத்ரயாகம் நேற்று நடந்-தது. யாகத்தில், 108 மூலிகைகள் பயன்படுத்தப்பட்டன. 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கினர். தொடர்ந்து வருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரர், கோவில் பிரகாரத்தை ஐந்து முறை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை