சஷ்டி விழா கொடியேற்றம்
சஷ்டி விழா கொடியேற்றம்தாராபுரம், நவ. 3-தாராபுரம் புது காவல் நிலைய வீதியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள், கொடியேற்றம் மற்றும் பூஜைகளில் பங்கேற்றனர். தொடர்ந்து சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கங்கணம் அணிந்து கொண்டனர். விழாவையொட்டி சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது.