| ADDED : மார் 09, 2024 01:15 AM
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் கவின் கலை மன்ற விழா என முப்பெரும் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட அரசு கலை கல்லுாரி முதல்வர் அலெக்சாண்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாரதியார் பல்கலை தேர்வில் துறை வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டி, கவின் கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். கல்லுாரி கல்வியாண்டுக்கான ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.