ஈரோடு: தமிழகம் முழுவதும், நாளை அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடக்க உள்ளதுடன், முன்னாள் மாணவர்களை குழுவில் சேர்க்க அரசு வழிகாட்டி உள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்ப-டுத்தவும், கல்வி தரத்தை உயர்த்தவும் பல்வேறு முன்னெடுப்பு-களை அரசு செய்கிறது. பள்ளிகளில் பெற்றோர், சமூக செயல்-பாட்டாளர்கள் கொண்ட பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்-கப்பட்டு, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்-கொள்ளப்படுகிறது.இந்நிலையில், பள்ளி மேலாண்மை குழுவில் முன்னாள் மாண-வர்களையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கும் அரசு, அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி நாளை (ஆக. 2) தமிழகம் முழுவதிலும், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க முதன்மை கருத்தாளர் சுடர் நடராஜ் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், கல்வி தர மேம்பாடு, அறிவு சார்ந்த கல்வி சமூகமாக மாற்றும் வகையில் பள்ளி மேலாண்மை குழு அமைக்-கப்படுகிறது. இக்குழு கூட்டம் மாநில அளவில் உள்ள, 37,500 அரசு பள்ளிகளில் நாளை நடக்கிறது. பெற்றோர், முன்னாள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களையும் குழுவில் இணைக்க அரசு அனுமதியளித்துள்ளது. கல்வி உரிமை சட்டப்-படி ஏற்படுத்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களில் தற்-போது, பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர்கள், மகளிர் குழுவினர் என, 20 பேர் உறுப்பினர்-களாக கொண்ட குழு செயல்படுகிறது. இந்நிலையில், முன்னாள் மாணவர்கள் நான்கு பேரை சேர்க்கும் அரசு உத்தரவுப்படி இனி இக்குழுவில், 24 பேர் இடம் பெறுவர். இவ்வாறு கூறினார்.