குளத்தில் மீன் பிடித்த பள்ளி மாணவன் பலி
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம், கணபதி நகரை சேர்ந்த விவசாயி வெங்கிடுசாமி மகன் சந்தோஷ், 15; தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன். ராமபையலுாரில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க நேற்று முன் தினம் காலை சென்றவர், இரவாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த வெங்கிடுசாமி சத்தி போலீசில் நேற்று புகாரளித்தார். போலீசார் விசாரணை நடத்தி தேடியபோது, ராமபையலுார் குளம் அருகில் சந்தோசின் ஆடை, செருப்பு கிடந்தது. இதனால் தீயணைப்பு நிலைய வீரர்களை வரவழைத்து தேடினர். இதில் சந்தோசின் உடல் மீட்கப்பட்டது. சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.