வன உரிமை சட்டம் குறித்து கருத்தரங்கு
சத்தியமங்கலம், வன உரிமைச் சட்டம் பற்றிய கருத்தரங்கு, சத்தியமங்கலத்தில் நேற்று நடந்தது. கடம்பூர் ராமசாமி தலைமை வகித்தார். கணேஷ், செல்வராஜ், அருள்சாமி, ஜடையப்பன் முன்னிலை வகித்தனர்.----நாடாளுமன்றத்தில், ௨௦௦௬ல் நிறைவேற்றப்பட்ட வன உரிமை அங்கீகார சட்டம் புலிகள் காப்பகங்கள், தேசிய பூங்காக்கள், வன வலிங்கு சரணாலயங்கள் அனைத்துக்கும் பொருந்தும். இதன்படி பழங்குடிகளின், 13 வகையான வளர்ச்சிப்பணிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஹெக்டேருக்கும் அதிகமாகாமலும், அதில் மரங்கள், 75க்கும் மிகாமல் இருப்பின் அதை அகற்றிக் கொள்ள வழிவகை செய்துள்ளது. இதன்படி தாளவாடி ஊராட்சி ஒன்றியம் -தலமலை ஊராட்சியில், மாவநத்தம் செட்டில்மென்ட்டில் கான்கிரீட் பாதை அமைக்கவும், ஆசனுார் ஊராட்சியில் புதுக்காடு கிராமத்துக்கு பாதை அமைக்கவும், பயனர் முகமை வன நில வகைமாற்றம் கோரியபோது, மாற்றம் செய்ய வனத்துறை மறுக்கிறது. இதனால் சத்தி புலிகள் காப்பகத்தில் பழங்குடிகளுக்கான அடிப்படை வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது. சட்டப்படி இது தவறாகும் என்றும் தெரிவித்தனர். -கருத்தரங்கில் வன உரிமை சட்ட செயல்பாட்டாளர் பிஜாய், முன்னாள் எம்.எல்.ஏ.,சுந்தரம், பழங்குடி மக்கள் சங்க தலைவர் குணசேகரன் பேசினர்.