கொடுமுடி, கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ரூ.28.72 லட்சத்துக்கு ஏலம் போனது.கொடுமுடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், 13,359 தேங்காய்கள் வரத்தாகின. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 9,151 ரூபாய். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 23.89 ரூபாய், அதிகபட்சமாக, 37.29 ரூபாய், சராசரியாக, 26.59 ரூபாய்க்கு ஏலம் போனது. கொப்பரை தேங்காய் (82.17 குவிண்டால்) வரத்தானது. இதன் மதிப்பு, ஆறு லட்சத்து, 87 ஆயிரத்து, 691 ரூபாய். முதல் தரம் கிலோ குறைந்தபட்சமாக, 87.99, அதிகபட்சமாக, 92.89, சராசரியாக, 91.49 ரூபாய்க்கு ஏலம் போனது. இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 54.99, அதிக பட்சமாக, 88.99, சராசரியாக, 80.66 ரூபாய்க்கு ஏலம் போனது.209 எள் மூட்டை வரத்தானது. இதன் மதிப்பு, 20 லட்சத்து, 75 ஆயிரத்து, 820 ரூபாய். கருப்பு எள் கிலோ குறைந்தபட்சமாக, 119.79, அதிகபட்சமாக, 138.29, சராசரியாக, 136.29 ரூபாய்க்கு ஏலம் போனது. சிவப்பு எள் கிலோ குறைந்தபட்சமாக, 119.09, அதிகபட்சமாக,141.29, சராசரியாக, 137.89 ரூபாய்க்கு ஏலம் போனது. விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜமுனா முன்னிலையில் மொத்தம், 28 லட்சத்து, 72 ஆயிரத்து, 662 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.