மேலும் செய்திகள்
வெளிநாடு சுற்றுலா செல்ல 5 மாணவ, மாணவியர் தேர்வு
04-Dec-2025
ஈரோடு: 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் ஏற்கனவே நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்கள் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதலாம். இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் ஜன., 7ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பெற ஈரோடு மாவட்டத்தில், ஏழு அரசு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு இடையன்காட்டு வலசு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சத்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபி நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளிகளுக்கு சென்று www.dge.tn.gov.inல் தகுதி மற்றும் அறிவுரை அறிந்து விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
04-Dec-2025