உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துப்பாக்கி சுடுதல் போட்டி: ஈரோடு போலீசார் அசத்தல்

துப்பாக்கி சுடுதல் போட்டி: ஈரோடு போலீசார் அசத்தல்

ஈரோடு, தமிழக காவல்துறை சார்பில், மாநில துப்பாக்கி சுடும் போட்டி, சென்னையில் கடந்த மாதம் நடந்தது. ஆண்களுக்கான போட்டியில் பர்கூர் ஸ்டேஷன் ஏட்டு கோபால கிருஷ்ணன், 50 மீட்டர் ஓப்பன் சைட் த்ரீ பொசிஷன் ஷூட்டிங் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார். பெண்கள் பிரிவில் ஈரோடு ஆயுதப்படை கான்ஸ்டபிள் சோனியா, 50 மீட்டர் ப்ரோன் பிரிவில் தங்கம் வென்றார். இதேபோல் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் கடந்த மாதம் நடந்தது. இதில் தமிழக அணி சார்பில் ஈரோடு மதுவிலக்கு எஸ்.ஐ., பிரகாஷ், 50 மீட்டர் பீப் சைட் ப்ரோன் பிரிவில் வெண்கலம், பர்கூர் ஏட்டு கோபால கிருஷ்ணன், 50 மீட்டர் ஓப்பன் சைட் த்ரீ பொசிஷன் பிரிவில் தங்கம் வென்றனர். இவர்களை ஈரோடு எஸ்.பி., சுஜாதா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி