| ADDED : ஜன 22, 2024 11:50 AM
பெருந்துறை: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில். பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியின் மூன்று குழுக்கள் முதல் பரிசை பெற்றுள்ளன.மத்திய அரசின் கல்வி அமைச்சகம் நடத்தும், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் வகைக்கான பிரிவு போட்டிகள், நாடு முழுவதும், 48 மையங்களில் நடத்தப்பட்டன. 1,305 அணிகள் பங்கேற்ற போட்டியில், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி சார்பில், சி.எஸ்., கணினி தொழில்நுட்பத் துறை, மெக்கானிக்கல், இஐஇ மற்றும் ஐடி துறை ஆகியவற்றின் சார்பில் மூன்று அணிகள் பங்கேற்றன.இந்த மூன்று அணிகளும் முதல் பரிசாக தலா, 1 லட்சம் ரூபாய் பெற்றுள்ளன. இக்கல்லுாரி குழுவினர், தோல் நோய் வெளிப்பாடுகளை கண்டறிய, ஏஐ அடிப்படையான மொபைல் பயன்பாடு, பவர் செக்டாரில் பயன்படுத்தப்படும் மென்பொருளில் மால்வேர் ட்ரோஜனை கண்டறியும் கருவி, அகச்சிவப்பு தெர்மோகிராபி மற்றும் மெஷின் லேர்னிங்கை பயன்படுத்தி கன்வேயர் கயிறு மற்றும் பெல்ட்டின் தேய்மானம், கிழிப்பிற்கான வன்பொருள் அடிப்படையிலான தீர்வு ஆகியவற்றை கண்டுபிடித்து பரிசு பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற குழுக்களுக்கு, கல்லுாரி தாளாளர் இளங்கோ, முதல்வர் பாலுசாமி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.