உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு சில செய்திகள்

ஈரோடு சில செய்திகள்

----ஜீவன் ரக்ஷா விருதுவிண்ணப்பிக்க அழைப்புஈரோடு: நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக்க விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்தை www.sdat.gov.inஎன்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலகத்துக்கு வரும், 25க்குள் ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட பிரிவு, வ.உ.சி. பூங்கா விளையாட்டரங்கம், ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 0424-2223157, 7401703490 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.70 வாகனங்களுக்குஅபராதம் விதிப்புஈரோடு: பள்ளிகள் திறப்பு எதிரொலியால், சீருடை, நோட்டு, புத்தகம், ஷூ, சாக்ஸ், டிபன் பாக்ஸ், ஸ்கூல் பேக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க, ஈரோடு கடைவீதிகளுக்கு நேற்று முன்தினம் மாலை மக்கள் படையெடுத்தனர். இதனால் மாநகர சாலையோரம் தாறுமாறாக டூவீலர், கார்களை நிறுத்தி சென்றனர். இதனால் நோ பார்க்கிங் பகுதிகளான மணிக்கூண்டு, ப.செ.பார்க், நேதாஜி சாலை, ஆர்.கே.வி.சாலைகளில் நெரிசல் ஏற்படுவதாக தெற்கு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராமராஜ், எஸ்.ஐ.,க்கள் கிருஷ்ண குமார், நாகராஜ் உள்ளிட்டோர் மூன்று பிரிவாக பிரிந்து போக்குவரத்தை சீரமைத்தனர். அதேசமயம் நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட, 70 வாகனங்களுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதில் கார்களே அதிகம் என்று, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை