உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு சில வரி செய்திகள்

ஈரோடு சில வரி செய்திகள்

தேர்தல் நிலை குழு சோதனைரூ.1.13 லட்சம் பறிமுதல்ஈரோடு: கர்நாடகா மாநிலத்தில் நடந்து வரும் லோக்சபா தேர்தலுக்காக, அந்தியூர் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில், 1.13 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.ஈரோடு மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்ததால், இம்மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்பட்டுவிட்டன. கர்நாடகாவில் வரும், 26 மற்றும் மே, 7ல் தேர்தல் நடக்க உள்ளதால், அம்மாநில எல்லையை ஒட்டிய ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தாளவாடி, பண்ணாரி சோதனைச்சாவடி, அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் பகுதியில் மட்டும் நிலை கண்காணிப்புக்குழு செயல்படுகிறது.அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை சோதனைச்சாவடியில், நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது கர்நாடகா மாநிலம் கொள்ளேகால், ராமாபுரத்தை சேர்ந்த மாதேவன், 32, என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த, 1 லட்சத்து, 13 ஆயிரத்து, 900 ரூபாயை பறிமுதல் செய்து, கருவூலத்தில் செலுத்தினர்.பிற மாநில லோக்சபா தேர்தல்சம்பளத்துடன் விடுப்புக்கு உத்தரவுஈரோடு-ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பக்கத்து மாநிலமான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் லோக்சபா தேர்தல் வரும், 26 முதல் மே, 13 வரை நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்துள்ளது. இத்தேர்தல் கேரளாவில் வரும், 26, ஆந்திராவில் மே, 13 அன்றும், கர்நாடகாவில் முதற்கட்டமாக வரும், 26, இரண்டாம் கட்டமாக மே, 7ல் நடக்க உள்ளது.எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும், தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் நாளில் அவர்கள் ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகாரை, 'இ.வினோத்குமார், இணை இயக்குனர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், ஈரோடு, போன்: 99943 80605, 0424 2219521 மற்றும் சி.கார்த்திகேயன், இணை இயக்குனர், போன்: 98650 72749, 0424 2211780' என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.4.39 லட்சத்துக்குபொருட்கள் விற்பனைஈரோடு: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 13,652 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 29.69 முதல், 32.49 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 4,486 கிலோ எடையுள்ள தேங்காய், 1 லட்சத்து, 37 ஆயிரத்து, 806 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய், 113 மூட்டைகள் வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 91.69 முதல், 96.05 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 66.10 முதல், 85.10 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 3,228 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், மூன்று லட்சத்து, 1,367 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து நான்கு லட்சத்து, 39 ஆயிரத்து, 173 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ