உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு பொறியியல் கல்லுாரியில் தென்னிந்திய விளையாட்டு போட்டி

கொங்கு பொறியியல் கல்லுாரியில் தென்னிந்திய விளையாட்டு போட்டி

ஈரோடு, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில், தென்னிந்திய அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி நடந்தது. கைப்பந்து, இறகுபந்து, கபடி, கூடைப்பந்து, மேசைப்பந்து உள்ளிட்ட போட்டி, ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடந்தது.இதில் பொறியியல் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலை, கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளிட்ட, 57 கல்வி நிறுவனங்களின், 108 குழுக்களை சேர்ந்த, 700 மாணவர், 400 மாணவியர் பங்கேற்றனர். சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரும் சர்வதேச வீரருமான செல்வ பிரபு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கினார். கொங்கு கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் சச்சிதானந்தன், கொங்கு பொறியியல் கல்லுாரி தாளாளர் கிருஷ்ணன், முதல்வர் பரமேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ