உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இடமாறுதல் மனு வழங்க போலீசாருக்கு எஸ்.பி., அழைப்பு

இடமாறுதல் மனு வழங்க போலீசாருக்கு எஸ்.பி., அழைப்பு

ஈரோடு :ஈரோடு எஸ்.பி., சுஜாதா, மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இடமாறுதல், சிறப்பு பிரிவுகளுக்கு அயல் பணி கோரி மனு சமர்ப்பிக்கலாம். எஸ்.எஸ்.ஐ., முதல் இரண்டாம் நிலை காவலர் வரை விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்தில் பெயர், பதவி, எண், படையில் சேர்ந்த நாள், தற்போது பணி செய்யும் ஸ்டேஷன், இடமாறுதலுக்கான காரணம், இதற்கு முன் பணியாற்றிய ஸ்டேஷன்களின் விபரம், பணியிடம் மாற்றம் கோரும் ஸ்டேஷன் விபரத்தை குறிப்பிட வேண்டும். மனுவில் ஸ்டேஷனின் பொறுப்பு அதிகாரி மற்றும் டி.எஸ்.பி., கையெழுத்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும். கையெழுத்தின்றி அனுப்பப்படும் விண்ணப்பம் ஏற்கப்படாது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை