மேலும் செய்திகள்
ஈரோட்டில் இருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கம்
10-Jul-2026
ஈரோடு: ஈரோட்டில் இருந்து நாளை (31) மதியம் 2:35 மணிக்கு ஒடிசா மாநிலம் சம்பல்பூர் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் புறப்-படுகிறது. சேலத்துக்கு, 3:40 மணிக்கும், ஜோலார்பேட்டைக்கு மாலை, 5:58 மணிக்கும் செல்கிறது. சனிக்கிழமை நள்ளிரவு, 11:15 மணிக்கு சம்பல்பூரை ரயில் சென்றடைகிறது. இந்த ரயில் காட்பாடி, பெரம்பூர்,கூடூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சாமல்கோட், கோட்டவலசு, பாப்பிலி, ராயகடா, பாலான்கீர் வழியாக சம்பல்பூர் செல்கிறது. பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
10-Jul-2026