விளையாட்டு போட்டி அட்டவணை
திருப்பூர், டிச. 15-திருப்பூர் மாவட்ட அளவில் திறமை காட்டி வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கான மாநில விளையாட்டு போட்டி பள்ளி கல்வித்துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அரையாண்டு தேர்வு துவங்கியதால், போட்டி நிறுத்தப்பட்டது. அட்டவணை மாற்றியமைக்கப்பட்டு, புதிய அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 2025 ஜன., மாதம் நடக்கவுள்ளது. 17 வயது மாணவ, மாணவியருக்கு மதுரையில் நடக்கிறது.ஜன., 22 முதல், 25 வரை ஜூடோ, பீச் வாலிபால் போட்டி கன்னியாகுமரி, நீச்சல், சைக்கிள் போட்டி திருநெல்வேலி, ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக் சென்னையில் நடக்கிறது. ஜன., கடைசி வாரத்துக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.