உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இலங்கை தமிழர் கைது

இலங்கை தமிழர் கைது

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் நேற்று முன்-தினம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். முகாமில் வசிக்கும் சந்திரன், 53, வருவாய் ஆய்வாளரிடம் வாக்குவா-தத்தில் ஈடுபட்டு, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின்படி, பவானிசாகர் போலீசார் சந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !