உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.எஸ்.ஐ.,க்கு பளார் மப்பு ஆசாமி மீது வழக்கு

எஸ்.எஸ்.ஐ.,க்கு பளார் மப்பு ஆசாமி மீது வழக்கு

கோபி, கோபி அருகே பாரியூரில், கோபி ஸ்டேசன் எஸ்.எஸ்.ஐ., கண்ணுசாமி, 52, நேற்று முன்தினம் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தியூரை சேர்ந்த குமார், 40, நண்பர்களுடன் அதேபகுதியில் சென்டர்மீடியன் மீது அமர்ந்தபடி, போதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். அதைக்கண்ட எஸ்.எஸ்.ஐ., 'பொது இடத்தில் சத்தமிடலாமா?' என கேட்டுள்ளார். இதைக்கேட்ட குமார், 'தகாத வார்த்தை பேசி, எங்களை போகச்சொல்ல நீ யார்?' என்று கூறி கண்ணுசாமியை அறைந்துவிட்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து எஸ்.எஸ்.ஐ., அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த கோபி போலீசார், குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !