இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க மாநில விருது
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகளை ஊக்கு-விக்கும் வகையில், மாநில அளவில் விருது வழங்கப்பட உள்-ளது.இதுபற்றி தோட்டக்கலை துணை இயக்குனர் மரகதமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: இயற்கை தோட்டக்-கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், மாவட்ட, மாநில அளவிலான நிபுணர் குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக, 1 லட்சம் ரூபாய், 2ம் பரிசு, 60,000 ரூபாய், 3ம் பரிசு, 40,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.பங்கேற்போர் பதிவு கட்டணம், 100 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம், தோட்டக்கலை இணைய தளம், www.tnhorticulture.tn.gov.inல் பதிவேற்றம் செய்து, உரிய ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்-துள்ளார்.