உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மஞ்சள் வாரிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை: பிரசாரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

மஞ்சள் வாரிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை: பிரசாரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், ஈரோடு நகரப்பகுதியான பெரியார் நகர், என்.ஜி.ஓ., காலனி, சென்னிமலை சாலை டீசல் ெஷட், பவர் ஹவுஸ் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக, ஒரே இடத்தில் மஞ்சள் வணிக வளாகம் அமைக்க, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசு மூலம் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்போது, ஈரோட்டில் அலுவலகம் அமைக்கவும், மஞ்சளுக்கு குறைந்த பட்ச விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஜவுளி சார்ந்த ஈரோடு பகுதியில் விசைத்தறியில் தொழில் நுட்பம் மேம்படவும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு தொழில் நுட்ப ரீதியிலான பயிற்சி இலவசமாக அரசு மூலம் பெற்றுத்தரவும், விசைத்தறிகளை மேம்படுத்த மானியம் பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.இப்பகுதியில் ஜவுளி சார்ந்தவர்களுக்கு சாயக்கழிவு நீர் வெளியேற்ற பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்தந்த பகுதி பொதுமக்களை சந்தித்து, அவர்களது கோரிக்கை, குறைகளுக்கு தீர்வு காண தனி அலுவலகம் அமைத்து, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, 30க்கும் மேற்பட்ட வீதிகளில் மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார். அனைத்து இடங்களிலும் பெண்கள், தொண்டர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணியம், பகுதி செயலாளர்கள் மனோகரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ