சென்னிமலை கோவிலில் மார்ச் 3ல் நடையடைப்பு
சென்னிமலை: அடுத்த மாதம், 3ம் தேதி சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதனால் சென்னிமலையில் மலை மீது அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்றைய தினம் நடை அடைக்கப்படுகிறது. மார்ச், 3ம் தேதி மதியம், 3:20 மணிக்கு சந்திரகிரகணம் ஆரம்பித்து, 6:47 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் அன்று உச்சிகால பூஜை, 11:30 மணிக்கு நடத்தப்படும். பூஜை முடிந்து பகல், 12:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். கிரகண தோஷ நிவர்த்திக்கு பின், மறுநாள் காலை, 6:00 மணி முதல் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.