அரசு பள்ளிகளில் இன்று மாணவர் குழு பதவியேற்பு
ஈரோடு: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில், மகிழ் முற்றம் என்ற பெயரில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து குழுக்கள் துவங்கப்பட்டு, இக்குழுக்கள் மூலம் மாணவர்க-ளிடையே அரசியல் அறிவுசார்ந்த அனுபவங்கள், ஆளுமை திறன்-மேம்பட, மாதிரி சட்டசபை, மாதிரி லோக்சபா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.ஈரோடு மாவட்-டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மகிழ் முற்றம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் குழுவின் தலைவர்கள், உறுப்பினர்கள் குழந்தைகள் தினமான இன்று பதவியேற்கின்றனர்.